நான் தினமும் மாட்டு கோமியம் குடிப்பேன் – பிரபல பாலிவுட் நடிகர் பரபரப்பு பேட்டி!!
‘காலா'பட புகழ் நடிகை ஹூமா குரேஷி மற்றும் லாரா தத்தா பூபதியுடன் தனது வரவிருக்கும் ‘பெல் பாட்டம்' படத்திற்காக தற்போது ஸ்காட்லாந்தில் நடிகர் அக்ஷய் குமார் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் ஒரு இன்ஸ்டாகிராம் லைவ் உடன் இணைந்தார். அவருடன் இணைந்து ‘Into the wild' எனும் ஒரு சாகச நிகழ்ச்சியில் பங்குபெற்றதைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதன் விளம்பர டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், யானை சாணத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரை அக்ஷய்குமார் குடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில், யானையின் சாண நீரைக் குடிக்க பியர் கிரில்ஸ் எப்படி உங்களை ஒப்புகொள்ள வைத்தார் என்று ஹுமா குரேஷி அக்ஷயிடம் கேட்டார்.
அப்போது பதிலளித்த அக்ஷய் “நான் கவலைப்படவில்லை, நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஆயுர்வேத காரணங்களுக்காக நான் மாட்டு கோமியத்தை குடிக்கிறேன். அதனால் யானை சாணம் தேநீர் எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை” என்றும் அவர் கூறினார்.