1. Home
  2. தமிழ்நாடு

இது போல் யாருக்கும் நடக்க கூடாது..! இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழுடன் வீடு திரும்பிய கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

1

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதைக் கண்முன் நிறுத்தும் விதமாகப் பாலஸ்தீன தந்தை ஒருவரின்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த முகமது அபு அல்- கும்சான் என்ற அந்தத் தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே மிஞ்சியது.

மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல்[Aysel] மற்றும் அசெர் [Asser] உயிரிழந்துள்ளனர். கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

Trending News

Latest News

You May Like