1. Home
  2. தமிழ்நாடு

நான் போட்டியிட வேண்டும் என அவசியம் இல்லை – துரை வைகோ..!

Q

தமிழக மக்களவை தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக தலைமையிலான ’இண்டியா’ கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவை தேர்தலில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.
இந்நிலையில், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது,
”தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இந்த வாரம் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கேட்டிருந்தோம். வரும் 2024 மக்களவை தேர்தலில் கூடுதலாக ஒரு சீட் கேட்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய தலைவர்கள் எங்களை நல்ல விதமாக நடத்தினார்கள். அதனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
மதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் நான் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பப்படுகிறார்கள். மக்களவை தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். நான் போட்டியிட வேண்டும் என அவசியம் இல்லை. எத்தனை தொகுதிகளில் மதிமுக போட்டியிடப்போகிறது என்பது முடிவாக வேண்டும். அதன் பின் எந்த தொகுதி. இதெல்லாம் தெரிந்த பிறகு தான் வேட்பாளர்கள் யார் என்பது முடிவெடுக்கப்படும்”, இவ்வாறு துரை வைகோ பேசினார்.

Trending News

Latest News

You May Like