“வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது!” : வனிதா ட்வீட்!

வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என்று கூறிய நடிகை வனிதாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
நடிகை வனிதா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு டிஆர்பிக்காக அவரை வைத்து நிகழ்ச்சி தயாரித்து வருகின்றனர். விஜய் டிவியில் பணியாற்றி வரும் அவர், வடிவேல் பாலாஜி யார் என்று தெரியாது என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல கோடி ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் விஜய் டிவியில் பணியாற்றும் வனிதா இதுவரை பாலாஜியை சந்தித்ததே இல்லை எனவும், அவருடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒரே சேனலில் பணியாற்றும் வனிதா, வடிவேலு பாலாஜியை தெரியாது என்று கூறியுள்ளது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சரமாரியாக அவரை திட்டி வருகின்றனர்.
Swear to god never seen any of the shows before ...I'm watching kpy live now because I'm a judge..he never performed or worked with me in the past or even present.. https://t.co/ZEV8GwueRZ
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 10, 2020
newstm.in