1. Home
  2. தமிழ்நாடு

நான் அப்படி சொல்லவே இல்லை... தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் - நடிகை ரோஜா விளக்கம்..!

1

முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இந்த கோவில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று. இங்கு சுவாமி தரிசனம் செய்ய தவமே இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.

தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள்.ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக கேப்சன்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள், தூய்மை பணியாளர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா. ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய நடிகை ரோஜா கோவில் தரைதளம் தாழ்வாக இருந்ததால் அவர்கள் ஓடி வந்தால் விழுந்து விடப்போகிறார்கள் என்று கருதி மெதுவா வாங்க என்று மட்டும்தான் கைகாட்டி பேசினேன். அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன்." என கூறினார். 

Trending News

Latest News

You May Like