நான் அப்படி சொல்லவில்லை! நடிகை கஸ்தூரி விளக்கம்..!
சென்னையில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி நேற்று பங்கேற்று இருந்தார். அப்போது அவர் பேசுகையில், " விடுதலை போராட்டத்தின்போது அந்தணர்களும் உயிர் விட்டனர் . ஆனால் தமிழர்கள் அவர்களை ஆரிய வந்தேரிகள் என்று கூறுகின்றனா். பல ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களின் அந்தப்புரத்தில் சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு பேசுபவர்கள் என்று கூறி இருந்தார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் வைரலாக பரவியது.
அப்போது நடிகை கஸ்தூரிக்கு எதிராக விமர்கனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தெலுங்கர்களும், தமிழர்களும் அண்ணன்-தம்பி போல் வாழ்கின்றனா்.
நடிகை கஸ்தூரி கூறிய வார்த்தைகள் தெலுங்கு மக்களை வேதனைப்படுத்தி உள்ளது. அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தெலுங்கு மக்கள் குறித்த தனது கருத்தை நடிகை கஸ்தூரி வாபஸ் பெற வேண்டும் என அவர் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதேபோல் தெலுங்கு சங்கத்தினர் பலரும் நடிகை கஸ்தூரிக்கு எதிராக பேச தொடங்கினா்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்த தனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அவர் கூறுகையில்," தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ திரிக்கப்பட்டுள்ளது. பிராமணர்களை வந்தேரிகள் என கூறுபவர்களை தான் தமிழர்களா? என்று நான் கேட்டேன். எனது அத்தை வீட்டிலும் தெலுங்கு பேசுவார்கள். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாக ஏற்று கொண்டனா் என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழும், தெலுங்கும் எனது இரு கண்கள் ஆகும். எனது குழந்தைகளும் இருமொழிகளை கற்றுள்ளனா். இந்த பிரச்சினையில் என்னுடைய நண்பர்கள் என நினைத்தவர்களே எனக்கு எதிராக பேசி உள்ளனா். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் என்னுடைய பேச்சை திமுகவினர் திரித்து வெளியிட்டுள்ளனா். என்னை ஒரு குடிகாரி என சிலர் கூறுகின்றனா். நான் தெலுங்கு மக்களின் மருமகள் தான். நான் தெலுங்கு மக்கள் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை" என கூறினார்.