எதிர் பார்க்கவே இல்ல... ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு! சேஷு மறைவு என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை : சந்தானம்..!
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை லொள்ளு சபா சேஷு என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னையில் சேஷுவின் அவருடைய உடல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகர் சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சந்தானம் ” எங்களுடைய லொள்ளு சபா குடும்பத்தில் இருந்த ஒருத்தர் சேஷு. அவருடைய மறைவு செய்து இப்படி வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
அவர் மறைவு செய்தியை கேட்டு இவ்வளவு பேர் வந்து இருக்கிறோம். அவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி என்னை பொறுத்தவரை அவர் நல்ல மனிதர் என்றார்.