1. Home
  2. தமிழ்நாடு

"இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது"... உங்கள பிடிக்க வருகிறது AI கேமரா..!

1

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் குப்பையை குப்பை தொட்டிகளில் கொட்டாமல் ரோடு,பொது இடங்களில் கொட்டுகின்றனர்.சிலர் அதை தீவைத்தும் எரிக்கின்றனர். தொடரும் இப்பிரச்சனையால் மக்கள் சில நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை எடுத்த போதிலும் பொதுமக்கள் இது போல் காரியத்தில் ஈடுபடுகின்றனர்.அதுமட்டுமின்றி அதிகாரிகள் ரோட்டில் குப்பையை கொட்டுபவர்களிடம் எச்சரிக்கை விடுக்கின்ற போதிலும் இந்நிலை தொடர்கிறது.பொதுமக்களின் இந்த பொறுப்பற்ற போக்கை தடுக்கும் விதமாக, பொது இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 5000 ரூபாய் உயர்த்தி சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் யார் குப்பையை கொட்டினார்கள் என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

ஏ.ஐ. கேமரா பொருத்துவது மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தன்னுடைய X தள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், 'சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க ஏஐ கேமரா பொருத்தப்பட உள்ளது எனவும், சென்னையின் பல்வேறு இடங்களில் இந்த கேமராக்கள் விரைவில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன' என்று அவர் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like