1. Home
  2. தமிழ்நாடு

இனி தப்பவே முடியாது..! இனி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு..!

1

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க சிறப்பு சட்டசபை கூட்டத்தில் இன்று (செப்.,03) பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்குவங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியை பெறுகின்றனர்.புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை மனித குலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Trending News

Latest News

You May Like