உங்க இம்சை தாங்க முடியல...நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பீர் முகம்மது (30), சேக் முகமது (27) ஆகியோர், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ எடுத்துள்ளனர். ஒருவருக்கு கையில் அடிபட்டு கட்டு போட்டிருப்பது போல நடித்து உள்ளனர்.
கட்டுப் போட்ட இளைஞருடன் வந்த மற்றொருவர், அங்கு பணியாற்றும் நபரிடம், “படம் பிடிக்கணும். தியேட்டர் எங்க இருக்கு?” எனக் கேட்கின்றனர். ஸ்கேன் எடுக்கும் இடம் பற்றி கேட்பதாக புரிந்துகொண்ட அவர் அங்கு செல்ல வழி சொல்கிறார். அதற்கு அந்த இளைஞர், “அங்க அமரன் படம் ஓடுதா? வேட்டையன் படம் ஓடுதா?” என நக்கலாக கேட்க, அவர் கோபமடைந்தார்.
பிராங்க் வீடியோ என்ற பெயரில் அரசு மருத்துவமனையில் வந்து நக்கலாகப் பேசியதைப் பார்த்து கோபமடைந்த மருத்துவமனை அதிகாரி, அவர்களை கண்டித்துள்ளார். வீடியோ எடுத்ததைக் கண்டித்த மருத்துவமனை அதிகாரியை அவதூறாகவும் பேசி உள்ளனர். பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவமனை அலுவலர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த பீர் முகம்மது (30), சேக் முகமது (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கேள்வி எழுப்பிய மருத்துவமனை அதிகாரியை அவதூறாகப் பேசியதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் இதுபோன்று பிராங்க் வீடியோ எடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.