1. Home
  2. தமிழ்நாடு

டார்ச்சர் தாங்க முடியல..ரூ 4 கோடி சொத்தை கோயில் உண்டியலில் போட்ட தந்தை..!

Q

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோனையூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயன், படவேடு அருகே காளிகாபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இவருக்கு சுப்புலட்சுமி, ராஜலட்சுமி என்ற இரண்டு மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். மேலும் கஸ்தூரி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் சுப்புலட்சுமி மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயன், கஸ்தூரி ஆகியோர் இடையே பல வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் விஜயன் மற்றும் கஸ்தூரிக்கு வாய் தகராறு ஏற்பட்டு கஸ்தூரியின் உறவினர்கள் முன்னாள் ராணுவ வீரரை மிரட்டியதாக கூறப்படுகின்றன. இதனால் விரக்தி அடைந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படவேடு கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் தனது 2 வீட்டின் சுமார் 4 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திரத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார். மேலும் இன்று ஆரணி படவேடு ரேணுகாம்பாள் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருவண்ணாமலை இணை ஆணையர் சண்முகம் சுந்தரம் மேற்பார்வையில் பணி நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் மூலவர் அருகே உள்ள உண்டியலை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு தற்போது காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் படவேடு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயன் காணிக்கையாக செலுத்திய 2 வீட்டு பத்திரங்கள் உள்ளடங்கி இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

இது சம்பந்தமாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : “என்னுடைய மகள்கள் என்னை அப்பா என்று கூப்பிட்டது கிடையாது. என்னை அடிப்பதற்கு 15 பேர் ஆட்களை கூப்பிட்டு கொண்டு வந்து விட்டார்கள். அப்போது என் மகள்களிடம் குடும்ப விஷயத்தை ஏன் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறாய், என கேட்டேன். 

என்னை சண்டை போடு என்று கூறினார்கள், எனக்கு 60 வயது ஆகிவிட்டது ராணுவ வீரர் என்பதால் என்னால் சண்டை போட முடியுமா என்ன?. மகள்கள் என்னுடன் சண்டை போடு என தெரிவித்தார். அப்போதே எனக்கு புரிந்து விட்டது, சண்டை போட தான் வந்திருக்கிறார்கள் என, சின்ன மகளும் என்னை, அப்பா இல்லை என்று சொல்லிவிட்டார். 2 பேருக்கும் நான் அப்பா இல்லை என்ற போது உங்களுக்கு சொத்து தர முடியாது என சொல்லிவிட்டேன். 

பொண்டாட்டி சோறு போடல

25 வருடங்களாக பொண்டாட்டியும் எனக்கு சோறு போடவில்லை. நீங்களும் என்னை அப்பா என்று சொன்னது கிடையாது, என்னுடைய சொத்தை கோவிலுக்கு போட்டு விடுகிறேன் என என் மனதில் நினைத்துக் கொண்டேன். பத்திரத்தை எடுத்துக்கொண்டு கோவில் உண்டியலில் போட்டுவிட்டேன். 

என்னுடைய 2 வீட்டின் டாக்குமெண்ட்டையும் போட்டு விட்டேன். மொத்தம் இரண்டு வீட்டை சேர்ந்து நான்கு கோடி ரூபாய் மதிப்பு இருக்கும். நான் கோவில் உண்டியலில் போட்ட பத்திரத்தில், மனப்பூர்வமாக இந்த சொத்தை கோயிலுக்கு தருகிறேன் என எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன். 

கோவிலில் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி கொடுத்தால் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் என சொன்னார்கள். நானும் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி கொடுக்கிறேன் என சொல்லிவிட்டேன். எனக்கு நான் தானமாக கொடுத்தது அம்மனுக்கு தான் போய் சேர வேண்டும். அம்மனுக்கு காணிக்கையாக கொடுப்பதற்கு நான் உறுதியாக இருக்கிறேன். இது பூர்விக சொத்து கிடையாது, இது அனைத்தும் நானே சம்பாதித்து சொத்து” எனத் தெரிவித்தார்.

 சொத்து பத்திரம் கோவிலுக்கு சேர வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர் விரும்புவதாக கூறினார்.

Trending News

Latest News

You May Like