1. Home
  2. தமிழ்நாடு

வெயில் தாங்க முடியல குருநாதா..! தமிழகத்தில் நேற்று மொத்தம் 20 இடங்களில் சதமடித்த வெயில்..!

1

தமிழகத்தில் நேற்று வேலூர், கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கி உள்ளது. ஈரோடு- 110, தருமபுரி- 107, சேலம்- 107, மதுரை- 106, திருச்சி - 109, திருத்தணி - 108, திருப்பத்தூர் - 106, நாமக்கல் - 106, தஞ்சாவூர் - 106, மீனம்பாக்கம் - 105, கடலூர் - 104, பாளையங்கோட்டை - 104, கோவை - 104, நுங்கம்பாக்கம் - 102, நாகப்பட்டினம் - 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் சென்னை நுங்கம்பாக்கத்தில் முதன்முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பம் அதிகமாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கட்டிடம் பெயிண்டர் போன்ற வெயிலில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்துக்ள்ளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திர வெயிலை விட அனல் காற்று தற்போது வீசி வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதே போல் தர்பூசணி, இளநீர், பப்பாளி, வெள்ளேரி, ஜூஸ், கரும்புச் சாறு, பனங்காய் நுங்கு, கீரக்காய், பழ வகைகள் போன்ற நீர் ஆகாரங்கள் உள்ள பழ வகைகளை அருந்தி வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
 

Trending News

Latest News

You May Like