"நான் மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை" - பிரதமர் நரேந்திர மோடி..!
ஒடிசாவில் பிரச்சாரத்திற்கு இடையே பேசிய பிரதமர் மோடி, நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்.பிரதமர் மோடி கூறியது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
ஒடிசாவில் பிரச்சாரத்திற்கு இடையே ஊடகம் ஒன்றிற்கு பேசிய பிரதமர் மோடி, நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பேச்சில், என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.