1. Home
  2. தமிழ்நாடு

பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன் - அண்ணாமலை..!

1

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசிய கலந்துரையாடல் கூட்டத்தில், உணவுகளுக்கு தனித்தனி ஜிஎஸ்டி இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொழிலதிபரும், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான தொழிலதிபர் சீனிவாசன் சீனிவாசன் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறிப்பாக அவர், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உணவகத்துக்கு வரும்போதெல்லாம் சண்டையிடுவதாக ஜனரஞ்சகமான முறையில் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் ஜனரஞ்சகமாக பேசியதாகவும், தவறு ஏதும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமனே விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் பேசிய சில மணி நேரத்திலேயே, சீனிவாசன் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்து மன்னிப்பு கோரினார்.

கோவை அன்னபூர்ணா உணவக நிறுவனர் சீனிவாசன் மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோரை சந்தித்து எழுந்து நின்று ‘தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்க’ என மன்னிப்பு கோரிய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ வெளியிட்டதற்காக பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த வீடியோ வெளியானதற்காக, பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது வருத்தம் கோரியுள்ளார். தன் எக்ஸ் தளத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், “மரியாதைக்குரிய வணிக உரிமையாளருக்கும், மதிப்பிற்குரிய நிதியமைச்சருக்குமான உரையாடல் தொடர்பான தனிப்பட்ட உரையாடல் காணொளியை பொதுவெளியில் வெளியிட்ட கட்சி நிர்வாகிகளுக்காக தமிழ்நாடு பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன்.

இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு சீனிவாசன் அவர்களுக்கு அலைபேசியில் அழைத்து, நானே வருத்தம் தெரிவித்துள்ளேன்.

அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

Trending News

Latest News

You May Like