1. Home
  2. தமிழ்நாடு

நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்..!

Q

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கமல் உறுதிப்படுத்தினார்.
தொகுதி பங்கீடு குறித்து திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கமல்ஹாசன் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்துகொண்டார்.
தொகுதி பங்கீடுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியிருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like