நான் அண்ணாமலை போல், தனிநபர் தாக்குதல் நடத்தும் தூய்மையற்ற அரசியல்வாதி அல்ல : ஜோதிமணி எம்.பி!
கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணியின் தேர்தல் செலவுகளுக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பணம் அளிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி கூறுகையில், " தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை பாஜக அனுப்பட்டும். என் வீட்டிற்கு அமலாக்கத்துறை வந்தால் கஞ்சி போட்ட காட்டன் சேலைகளை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு கிடைக்காது. நேர்மையாக இருக்கும் பெண் நான். அண்ணாமலை போல, தனிநபர் தாக்குதல் நடத்தும், தூய்மையற்ற அரசியல்வாதி நான் இல்லை. கர்நாடகாவில் நேர்மையற்ற காவல்துறை அதிகாரியாக இருந்து தான், பாஜகவுக்கு வேலை செய்து வந்தார். வசூல்ராஜா போல், ஊழல்வாதியாகவும் அவர் இருந்துள்ளார்.
அண்ணாமலை எந்த அரசியல் பின்புலமும் கொண்டவர் அல்ல. மக்கள் பிரதிநிதியாகவும் அவர் இல்லை. அவருக்கு எதுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் அளவில் மக்கள் வரி பணத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.இந்த மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். ஆட்சி மாறும் போது அவரது ஊழல் செய்தது நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்.
கர்நாடகா துணை முதல்-அமைச்சரிடம் பணம் பெற்றுள்ளீர்கள் என அண்ணாமலை கூறிஇருக்கிறார். நான் நேர்மையான அரசியல்வாதி விவசாய குடும்பத்தில் பிறந்த எனது நேர்மையை பார்த்து பொறுப்புகளை வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா காவல்துறையில் இருந்த கருப்பு ஆடு அண்ணாமலை...
— Jothimani (@jothims) November 7, 2023
தமிழ்நாட்டின் வசூல்ராஜா.
ஊழல் அரசியல்வாதி.
தைரியம் இருந்தால் அமலாக்க துறையை என் வீட்டிற்கு அனுப்பவும். pic.twitter.com/AuVcmjhjWd