1. Home
  2. தமிழ்நாடு

இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி..!

Q

இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். ராம நவமி நாளான இன்று, நண்பகல் 12 மணியளவில், ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும்.

நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை வழிநடத்தும். இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like