1. Home
  2. தமிழ்நாடு

நான் கோவை உறுப்பினராக கேட்கிறேன்..! இந்த பகுதியில் இருக்கும் வருமானத்தை எடுத்து இங்கு செலவு செய்கிறீர்களா ? வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி..!

1

தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அவர் கூறுகையில், "மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசுக்கு தமிழகம் 1 ரூபாய் கொடுக்கிறது என்றால், அதற்கு ஈடாக அவர்கள் வெறும் 29 பைசாவையே கொடுக்கிறார்கள்.

ஆனால், அதே பாஜக ஆட்சி செய்யக்கூடிய உத்தரபிரதேச மாநிலத்திற்கு 1 ரூபாய்க்கு ஈடாக 2 ரூபாய் 73 பைசாவை மத்திய அரசு கொடுக்கிறது. இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையில் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது" என அவர் கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் தங்கம் தன்னரசின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். இந்தக் கேள்வியை கேட்டதுமே ஆவேசமாக மாறி வானதி சீனிவாசன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கும் நிதியை எடுத்து, வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுப்பதாக தங்கம் தென்னரசு பேசி இருக்கிறார். இப்போ நாங்களும் அதே மாதிரியே கேக்குறோம். கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து அரசுக்கு வரும் வருமானத்தில் இருந்து, எத்தனை சதவீதத்தை கோவைக்கு நீங்க திருப்பி செய்றீங்க?

 நான் கோவை தொகுதி எம்எல்ஏவாக கேட்கிறேன். நீங்கள் (தமிழக அரசு) கோவையில் இருந்து வருமானத்தை முழுமைாயக கோவைக்கு செலவு பண்ணுகிறீர்களா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கு கொடுக்குறீங்களா? அந்த செலவுக் கணக்கை கொடுங்க. அதுதான் நியாயம். உங்களுக்கு வசதிப்படுற கணக்கை மட்டும் கொடுத்தால் அது நியாயமாக இருக்காது" என வானதி சீனிவாசன் கூறினார்.

இந்நிலையில், தங்கம் தென்னரசு மற்றும் வானதி சீனிவாசனின் பேச்சுகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like