போலீஸ் கேரக்டரில் நடித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் !! விஜயகாந்த் பேசிய வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரல்..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி , கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை CBI வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
#JusticeForJayarajandBennicks#விஜயகாந்த் sir ... Unmaiyana varthai always great human...!! pic.twitter.com/6PMBlGoQ0K
— Prakash (@prakash_s2510) June 28, 2020
இந்நிலையில் , காவல்துறை குறித்து தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் , 'இதுவரை நிறைய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன்.
ஆனால், அப்படி நடித்ததை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். இனி நானும் அப்படி நடிக்க மாட்டேன். என் பிள்ளையாய் இருந்தால் கூட போலீஸ் கேரக்டரில் நடிக்க விட மாட்டேன்' என்று மிக காட்டமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Newstm.in