டெல்லியை புரட்டி எடுத்த ஹைதிராபாத்.! 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்று போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஐதராபாத் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.இரு அணிகளும் தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது.ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த 4-ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்
20 ஓவரில் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் அடுத்தடுத்து அதிரடி காட்டி விளையாடியது. இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது டெல்லி அணி.
இறுதியில் 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் ஹைதிராபாத் அணியிடம் தோல்வியடைந்தது டெல்லி அணி.