ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு..!

ஐதராபாத் நம்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ, நான்கு தளங்களிலும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படு காயமடைந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கியவர்களில் 16 பேரை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ரசாயன கிடங்கில் குடியிருப்பை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அது 9 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.