உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்த மனைவி ! - கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா போத்தன்குட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(53). டெய்லரான இவர் கடந்த 4ஆம் தேதி இரவில் பைக்கில் சென்றுகொண்டிருந்தப்போது கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மீட்டு, அடுத்தடுத்து திருப்பத்துார், வேலுார், சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். உடற்கூறாய்வில் அவரது தலை மற்றும் முதுகில் இருந்து நாட்டுத் துப்பாக்கி ரக குண்டுகள் 14 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அவரது மனைவி மீது சந்தேகம் எழுந்தது. 53 வயதான கோவிந்தராஜின் மனைவி காஞ்சனாவுக்கு வயது 38. தம்பதி இடையே 15 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ள நிலையில், அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.
அண்மையில் கோவிந்தராஜ் வீடு கட்டும்போது, அங்கு மேஸ்திரியாக ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனுாரைச் சேர்ந்த 30 வயதான குப்புசாமி சேர்ந்தார்.
பின்னர் நாளடைவில் மேஸ்திரி குப்புசாமிக்கும், காஞ்சனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மதுவுக்கு அடிமையான கோவிந்தராஜ், தினசரி குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதாலும் தனது கள்ளக்காதலன் உடனான தனிமை பாதிக்கப்பட்டதாலும் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி குப்புசாமி நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்தார். அவர் பைக்கில் செல்லும்போது துப்பாக்கியால் பின்னந்தலையில் சுட்டுள்ளார். குண்டுகள் தலையைத் துளைத்ததும் கோவிந்தராஜ் கீழே விழுந்தார்.
இதனையடுத்தே விபத்தில் சிக்கியதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட கோவிந்தராஜின் மனைவி காஞ்சனா, அவரது கள்ளக்காதலன் குப்புசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்..
newstm.in