புருஷனின் கடன்: மனைவியை மரத்தில் கட்டிவைத்து அடி..!

ஆந்திர மாநிலம் சித்தூரில் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பன். இவர் முனிகண்ணப்பா என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாததால், தனது மனைவி ஸ்ரீஷா மற்றும் மகனை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு குடியேறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீஷா மகனின் பள்ளி சான்றிதழை வாங்க நாராயணபுரத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த முனிகண்ணப்பா அவரிடம் சென்று கடனை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அப்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த பொலிஸார் விரைந்து வந்து ஸ்ரீஷாவை மீட்டனர். மேலும், முனிகண்ணப்பா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
கணவன் வாங்கிய கடனுக்காக மனைவி கட்டிவைக்கப்பட்டது வைரலானதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.