மனைவிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டருக்கு கணவர் கொலை மிரட்டல்! ஏன் தெரியுமா?

தன் மனைவிக்கு பிரசவம் பார்த்த பெண் மருத்துவரை கொன்றுவிடுவேன் என்று கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக ஒரு பெண் வந்தார். அவருக்கு ஷீலா நாயக் என்ற மருத்துவர் பிரசவம் பார்த்தார். பெண்ணின் நிலை சற்று மோசமாக இருந்ததால் அந்த மருத்துவர் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து பிரசவம் நடந்த பெண்ணின் கணவர் அமீர்கான் பதான் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவர் ஷீலா நாயக்கை மிரட்டியுள்ளார். மருத்துவரிடம் ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
சிசேரியன் செய்த பின்னர் அதற்கு பணம் செலுத்தச் சொல்லிய போது அந்த நபர் இப்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் நிலை மோசமாக இருந்ததால்தான் சிசேரியன் செய்ததாக மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அமீர்கான் பதான் மீது மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த நபர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in