1. Home
  2. தமிழ்நாடு

மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூ.5,000க்கு விற்பனை செய்த கணவன்..

மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூ.5,000க்கு விற்பனை செய்த கணவன்..


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி உள்ளது. இங்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி உள்பட குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய மனைவியை 4 பேருக்கு 5,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். அதன் பின் 21 நாட்கள் கழித்து, விற்கப்பட்ட அப்பெண்ணை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இக்கொடூரத்தை அப்பெண் அனுபவித்து வந்துள்ளார்.

மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூ.5,000க்கு விற்பனை செய்த கணவன்..

அக்கும்பலிடம் சிக்கித் தவித்து வந்த பெண், அவர்கள் இல்லாத நேரம் பார்த்து ஒரு வழியாக தப்பி அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன்பின்னரே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதலில் அப்பெண்ணின் புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து தனது கணவன் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு எதிராக சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூ.5,000க்கு விற்பனை செய்த கணவன்..

இந்த மனு விசாரணைக்கு வந்தப்பேது, இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் 2ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பெண் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like