1. Home
  2. தமிழ்நாடு

கணவன் மனைவி இருவருக்கும் 10,000 ரூபாய் பென்சன் கிடைக்கும் சூப்பரான திட்டம்..!

1

முதியோருக்கு மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. அந்தத் திட்டத்தின் பெயர் அடல் பென்சன் யோஜனா. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். சில நிபந்தனைகளுடன் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும்.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதற்கு சில முக்கியமான நிபந்தனைகள் உள்ளன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கணவனும் மனைவியும் கூட்டுக் கணக்கைத் தொடங்குவதன் மூலமும் இதில் முதலீடு செய்யலாம். உங்களுடைய 18 வயதில் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினால் நீங்கள் ஒரு நாளைக்கு 7 ரூபாய் அதாவது ஒரு மாதத்தில் 210 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

1

நீங்கள் 60 வயதை பூர்த்தி செய்த பிறகு, உங்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அரசின் இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும். உங்கள் முதலீட்டிற்கு ஏற்ப உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கணவனும் மனைவியும் பயன்பெற முடியும். கணவன்-மனைவிக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 எளிதாகக் கிடைக்கும்.

சில காரணங்களால் வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவருக்கு ஓய்வூதியப் பலன் கிடைக்கும். க

Trending News

Latest News

You May Like