1. Home
  2. தமிழ்நாடு

ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் 5 கோடி ரூபாய் ஏமாற்றிய கணவன், மனைவி ..!

1

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டவர்கள் வந்து புகார் மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் மீனவர் பகுதியை சேர்ந்த மீனவர் ராஜா(50), இவரது மனைவி துளசி (42). இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதி மக்களிடம் ₹1 லட்ச கொடுத்தால் ஒரு மாதத்தில் ₹2 லட்ச இரட்டிப்பு பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதேபோல் அதிக பவுன் நகைகள், அதிக மளிகை பொருட்கள் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அந்த தம்பதியினர் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர்.

இதில் கணவன்-மனைவி பேச்சில் மயங்கிய அப்பகுதி பெண்கள் இரட்டி பணம் கிடைக்கிறதே என்று அதனை நம்பி நப்பாசையில் பலர் தங்களது நகைகள் மற்றும் நிலங்களை விற்று ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை ராஜா-துளசி தம்பதியினரிடம் பணம் கொடுத்துள்ளனர். தீபாவளி சீட்டிலும் பலர் சேர்ந்துள்ளனர். அதேபோல், 10 மாதங்களுக்கு 10 நபர்களை சேர்த்து ₹10 லட்ச மாதாந்திர சீட்டும் நடத்தி உள்ளார்.

ஆனால் கொடுத்த வாக்கின்படி சீட்டு போட்டவர்களிடமும், இரட்டிப்பு பணம் தருவதாக பணம் வாங்கியவர்களிடம் நாளை பணம் தருகிறேன், இரண்டு நாள் கழித்து தருகிறேன், என சாக்கு போக்கு சொல்லி கணவன்-மனைவி இருவரும் சினிமாவில் வருவதுபோல, தன் வீட்டிற்கு பணம் கேட்டு வந்த அப்பகுதி பெண்களை ஏமாற்றி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுத்து பார்த்த அப்பகுதி பெண்கள் கூட்டமாக சென்று பட்டிபுலத்தில் உள்ள வீட்டிற்கு சென்று முற்றுகையிடவே அங்கிருந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

இதில், மொத்தம் ₹ 5 கோடி மோசடி செய்த ராஜா-துளசி தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் 18ம் தேதி மாமல்லபுரம் போலீசில் புகார் மனு கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள ராஜாவின் மனைவி துளசியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like