உடனே முந்துங்க! புதிய வீடு வாங்க ரூ.4 லட்சம் நிதியுதவி..!!
சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 இலட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு இது குறித்து தெரிவித்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை பெற உதவிடுமாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.