1. Home
  2. தமிழ்நாடு

இது யாரோ விஷமிகள் செய்த செயல் : கன்னியாகுமரி கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான பாம்புகள் உண்மையல்ல..!

1

கன்னியாகுமரி  மாவட்டத்தில் சுற்றுலா தளங்களுக்கு குறைவில்லை. கன்னியாகுமரி கடற்கரை, மாத்தூர் தொட்டி பாலம், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, படகு சவாரி, பத்மநாபபுரம் அரண்மனை, காமராஜர் நினைவு மண்டபம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பகவதி அம்மன் கோவில், மகாத்மா காந்தி மண்டபம், இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால்தான் இங்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் முதல் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வரை படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான பாம்புகள் தென்படுவதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

கடற்கரை ஒன்றில் குவியல் குவியலாக பாம்புகள் பாறைக் கற்களுக்கு நடுவே ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.மேலும், இக்காணொளி கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது என்று சிலர் வதந்தி பரப்பினர்.

கன்னியாகுமரி கடற்கரைக்குச் செல்லும் மக்கள், அங்குள்ள பாறைகள் மீது அமரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இது சுற்றுலாப் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தக் காணொளி பகிரப்படுவதற்கு பல நாள்களுக்கு முன்பே பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவலாகப் பரப்பப்பட்டுள்ளது என்று இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்தது.

மேலும், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காணொளியை சிலர் இணையத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளதாக அக்குழு கூறியுள்ளது.

Trending News

Latest News

You May Like