தொலைந்துபோன நூற்றுக்கணக்கான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு..!
பொதுமக்கள் தொலைத்த, திருடர்களிடம் பறிகொடுத்த 504 செல்போன்களை கோவை மாவட்ட காவல் துறையினர் மீட்டு அதன் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைத்தனர். இந்த கைப்பேசிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மீட்கப்பட்ட 504 செல்போன்களின் மதிப்பு ரூ.94 லட்சம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கோவை மாவட்ட பகுதியில் தொலைக்கப்பட்ட, திருடுபோகப்பட்ட மொத்தம் 2350 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.70 கோடி ஆகும்.