1. Home
  2. தமிழ்நாடு

மனநலம் பாதித்த பெண்ணை வேட்டியாடிய மனித மிருகங்கள்..!

மனநலம் பாதித்த பெண்ணை வேட்டியாடிய மனித மிருகங்கள்..!


காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். காமத்திற்கு, எதுவுமே இல்லை போல. ஆண், பெண் என்ற பால் பேதம் முதல் வயது வித்தியாசம், உடல்நிலை,மன நிலை என்று எதுவுமே இல்லை என்பது நடந்த ஒரு கொடுரமான சம்பவத்தின் மூலம் நாம் உணர முடிகிறது. இந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

ஊர் பேர் தெரியாத ஒரு மன நலம் பாதித்த பெண் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிவார். அவரது பெயர் மேரி என்று அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அவருக்கு யாரவது தினமும் உணவு கொடுப்பார்கள். அதனை சாப்பிட்டு விட்டு, கிடைத்த இடத்தில் படுத்து தூங்கி விடுவார்.

சமீப நாட்களாக மேரிக்கு உணவு கொடுக்க தேடிய போது அவரைக் காணவில்லை. தினமும் இரவு இதுபோன்று உணவு கொடுப்பவர்கள் மேரிக்கு உணவு கொடுப்பதற்காக தேடியுள்ளனர். காலையில் பார்த்தால் மயங்கிய நிலையிலேயே பொழுது விடிந்து வெகுநேரமாகியும் எழுந்திருக்காமல் கிடந்தார்.

அப்படித்தான் சம்பவத்தன்று இரவும் அவருக்கு உணவு கொடுக்க தேடியபோது அவர் அங்கே இல்லை. மறுநாள் காலையில் வழக்கம் போலவே தூங்கிக்கொண்டிருந்தார். மருத்துவனை அருகே இருக்கும் ஓட்டலில் சமையல் மாஸ்டராக இருக்கும் கார்த்திக், போவோர் வருவோர் வேடிக்கை பார்ப்பதைப் பார்த்துவிட்டு ஓடிவந்தார்.

ஆடைகள் கிழிந்து, உடல் முழுவதும் ரத்தக்கீறல்களுடன் கிடந்தார் மேரி. அவரை தட்டி எழுப்பியபோது, அவர் தூக்கத்தில் இல்லை, அரைமயக்கத்தில் இருக்கிறார் என்பது புரிந்தது. அதே நேரத்தில் மேரிக்கு அருகே நின்றிருந்த ஆட்டோவில் சிலர் அதேபோல அரை மயக்கத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களை கார்த்தி மற்றும் சிலர் பிடித்து இழுத்தபோது, ஆட்டோவில் ஏறி பறந்துவிட்டார்கள்.

இதையடுத்து அங்குள்ளவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து மேரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் உடல்நிலை கொஞ்சம் தேறியதும், அவரிடம் போலீசார் விசாரித்ததில், மனநலம் பாதித்த அவரால் நடந்ததை சரியாக சொல்ல முடியவில்லை.
ஆனால், அவர் சொன்னதை வைத்து என்ன நடந்தது என்பதை போலீசார் யூகித்துக் கொண்டார்கள்.

தினமும் இரவில் ஐந்து பேர் மேரியை ஆட்டோவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் அரை மயக்கத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பதை கேட்டு அதிர்ந்தனர் போலீசார்.

மனநலம் பாதித்த பெண்னுக்கு நேர்ந்த இந்த கொடுமையை அறிந்த போலீசார், அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம் அந்த கொடியவர்களை தேடி வருகிறார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like