1. Home
  2. தமிழ்நாடு

ஹ்ரித்திக் ரோஷன் என்.டி.ஆர் காம்போவில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் டீஸர் வெளியானது..!

Q

பாலிவுட் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் 'வார் 2' படம் ஆகஸ்ட் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அயான் முகர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.

 

யாஷ் ராஜ் நிறுவனம் பல்வேறு ஸ்பைவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. ‘ஏக் தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹாய்’, ‘வார்’, ‘டைகர் 3’ மற்றும் ‘பதான்’ ஆகிய படங்களை இதுவரை தயாரித்திருக்கிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘வார் 2’ படத்தினை தயாரித்து வருகிறது. இதில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார்.

 

இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்கள். 

 

‘வார் 2’ படத்தின் தொடர்ச்சியாக ‘ஆல்ஃபா’ என்ற படத்தினையும் ஸ்பைவர்ஸில் தயாரித்து வருகிறது யாஷ் ராஜ் நிறுவனம். இதில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வார் 2 டீசர் வெளியிடப்பட்டது. முழுமையான ஆக்ஷன் அம்சங்களுடன் இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக மாறியது.

என்.டி.ஆர் குரலுடன் டீசர் தொடங்குகிறது. நான் உன்னை ரொம்ப காலமா பாத்துட்டு தான் வர்றேன் கபீர். இந்தியாவின் சிறந்த சோல்ஜர். ராவில் சிறந்த ஏஜென்ட்....நீதான்...ஆனால் இப்போது இல்லை. உனக்கு என்னைப் பற்றி தெரியாது. இப்போது தெரிந்துகொள்வாய்...போருக்கு தயாராகுங்கள் என்று என்.டி.ஆர் சொன்ன வசனத்துடன் இந்த டீசர் தொடங்குகிறது. அந்த வசனத்துடன் ஸ்டைலிஷாக டீசருக்குள் என்.டி.ஆர் என்ட்ரி கொடுக்கிறார்.

ஹ்ரித்திக் ரோஷன், என்.டி.ஆர் இடையே வரும் ஆக்ஷன் எபிசோடுகள், சேஸிங் சீக்வென்ஸ்களுடன் ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் உள்ளது. 

இந்த பிரம்மாண்ட ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் என்.டி.ஆர் கேரக்டர் நெகட்டிவ் ஷேட்ஸில் இருக்கும் என்று டீசரைப் பார்த்தால் தெரிகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் வார் 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆகஸ்ட் 14 அன்று பான் இந்திய அளவில் இந்த படம் வெளியாகவுள்ளது.

Trending News

Latest News

You May Like