1. Home
  2. தமிழ்நாடு

ரயில் விபத்து எப்படி நடந்து இருக்கும்... வெளியான அனிமேஷன் வீடியோ..!

1

“மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் மாவட்டத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

விபத்து நடந்தது எப்படி?: மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது.

இதற்கிடையில் சரக்கு ரயிலுக்கு சரியான சிக்னலை சரியாக கவனிக்காமல் முன்னேறியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இது இன்னும் ரயில்வே துறையால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த கோர விபத்து எப்படி நடந்திருக்கும் என விலக்கும் பிரத்யேக அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது  
 

Trending News

Latest News

You May Like