1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் இந்தாண்டு விற்பனை எப்படி இருக்கும்?

1

இந்த ஆண்டு அட்சய திருதியை திருவிழா வரும் புதன் (30.4.2025) அன்று கொண்டாடப்படவுள்ளது. எனவே இம்முறை விற்பனை கோவையில் எப்படி இருக்க வாய்ப்புள்ளது என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமிடம் கேட்டதற்கு அவர் கூறியது:-

இன்றைய நிலவரப்படி 1 கிராம் 22 காரட் தங்கம் ரூ. 8940 ஆக உள்ளது. இதனுடன் 3% ஜி.எஸ்.டி.சேர்த்தால் மொத்தம் ரூ.9208/கிராம் ஆக இருக்கும். தங்கத்தின் விலை தற்போது குறைந்து உள்ளதால், இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று மக்கள் தங்கத்தை வாங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

அட்சய திரிதியை நாளின் போது எப்போது நகை வாங்கலாம் என வாடிக்கையாளர்களிடம் இப்போதே அழைப்புகள் வருகின்றன. இந்த ஆண்டு அட்சய திரிதியை திதி ஏப்ரல் 29ம் தேதி இரவு 9 மணிக்கு துவங்கி ஏப்ரல் 30ம் தேதி மாலை 7 மணியளவில் முடிவடையும். தங்கத்தின் விலை இந்த சிறப்பான நாள் முடியும் வரை இப்படியே இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விற்பனை நன்றாக இருக்கும் என நம்பலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நாளில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால், மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் பிறந்தநாள் இந்த தினத்தில் வருகிறது. எனவே அன்று எந்தப் பொருள் வாங்கினாலும் அது மென்மேலும்  வளர்ச்சி அடையும் என்பது ஐதீகம். ஐஸ்வரியங்களில் முதன்மையானது தங்கம் என்பதால் அதன் மேல் செய்யப்படும் அதிகரிக்கும் படி இருக்கும் எனவும் கூறுவர்கள்.

Trending News

Latest News

You May Like