“எப்படி இருந்த அஞ்சலி இப்படி ஆயிட்டாங்க…” : பரிதாபப்படும் ரசிகர்கள்!
நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பரிதாபமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
கற்றது தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி கதையை தேர்வு செய்து படங்களில் நடித்ததன் மூலம் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தன.
இடையே நடிகர் ஜெய் உடன் அவர் கிசுகிசுக்கப்பட்டாலும் கூட அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அஞ்சலி கொஞ்சம் குண்டாக இருப்பது தான் அழகு என்று ரசிகர்கள் கூறுவது வழக்கம்.
ஆனால் அவர் சமீபத்திய போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் இவ்வளவு ஒல்லியாக ஆகிவிட்டாரே என்று பரிதாபமாக கமெண்ட் செய்து வருகின்றனர். லாக் டவுன் போது அஞ்சலி உடற்பயிற்சி, யோகா என உடல் நலனின் அக்கறை கொண்டவராக மாறி இருக்கிறார்.
ஆனாலும் ரசிகர்கள் இப்போ இருக்கும் அஞ்சலி முன்பைவிட அழகாக இல்லை. பழைய அஞ்சலி தான் ரொம்ப அழகு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in