வங்கி ஏடிஎம்களில் மொபைல் போனின் மூலம் பணம் எடுப்பது எப்படி?
ஏடிஎம்க்கு நீங்கள் டெபிட் கார்டு எடுத்து செல்ல மறந்தாலோ அல்லது டெபிட் கார்டில் போதிய பணம் இல்லாவிட்டாலோ கவலை வேண்டாம். யுபிஐ மூலம் வேண்டிய பணத்தை எடுக்கும் வசதி ஏடிஎம்களில் இடம்பெற்றிருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யுபிஐ மூலம் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மக்களை அனுமதிக்கிறது. கார்டு இல்லாவிட்டாலும் மக்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இண்டர்ஆப்பரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ராவல் வசதி அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க், ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் ஆகியவற்றுக்கு நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இயங்கக்கூடிய கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) வசதியை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதி வந்தவுடன் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
உங்களிடம் இந்தியன் வங்கியில் கணக்கு இருந்தால், நீங்கள் யூனியன் வங்கி ஏடிஎம்மில் UPI அம்சத்தைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். வேறு வங்கி ஏடிஎம்களில் மொபைல் போனின் மூலம் பணம் எடுப்பது எப்படி? கார்டுலெஸ் கேஷ் வித்டிராவல் (cardless cash withdrawal) என்பது மிகவும் எளிது. மொபைலில் UPI ஸ்கேன் செய்யும் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் ஏடிஎம்மில் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், கார்டுக்கு பதிலாக பணம் எடுக்கலாம்.
எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், ஒருங்கிணைந்த கார்ட்லெஸ் கேஷ் வித்டிராவல் இயக்கப்பட்டிருக்கும் ஏடிஎம் மூலம், UPI QR Cash என்ற அம்சத்தைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். இது ஏடிஎம்களின் திரையில், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய டைனமிக் QR கோடு தோன்றும். அவ்வாறு QR கோடு தெரியும் போது, யூசர்கள் UPI செயலியைப் பயன்படுத்தி, அந்த கோடை ஸ்கேன் செய்து தேவையான தொகையை பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்டுலெஸ் கேஷ் எடுக்கும் வசதியை QR கோடு எனேபில் செய்யப்பட்டிருக்கும் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ, அந்த வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியை நீங்கள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து உங்கள் கணக்கு பதிவு செய்திருக்க வேண்டும். உதாரணமாக, உங்களிடம் SBI கணக்கு இருந்தால், SBI யோனோ அல்லது யோனோ லைட் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் QR Cash இயக்கப்பட்டிருக்கும் ATM மையத்தில், இயந்திரத்தின் திரையில் QR CASH என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். திரையில் நீங்கள் ரூ.2,000 அல்லது ரூ. 4,000 என்று காண்பிக்கப்படும் ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, திரையில் காண்பிக்கப்படும் QR கோடை உங்கள் யோனோ ஆப்பின் ‘QR cash withdrawal’ என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ATM நீங்கள் தேர்வு செய்த தொகையை டிஸ்பென்ஸ் செய்யும். இதே போல மற்ற வங்கிகளும் இந்த வசதியை வழங்கியுள்ளது.
ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நீங்கள் 1 லட்ச ரூபாய் வரை UPI வழியாக ஸ்கேன் செய்து வித்டிரா செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பை நிர்ணயித்துள்ளது. தினசரி வித்டிரா செய்யும் வரம்புகள் மற்றும் ஒரு முறை அதிக பட்சம் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பது அந்தந்த வங்கிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.