உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதியை ஈஸியாக அப்டேட் செய்யலாம்..! எப்படி தெரியுமா ?
ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும். அதிலுள்ள தகவல்கள் தவறாக இருந்தால் அரசு தொடங்கும் திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. எனவே பிறந்த தேதியில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை எவ்வாறு அப்டேட் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தலாம். இந்த ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் சென்று ஆதாரில் உள்ள தவறுகளை சரி செய்து கொள்ளலாம்.
முதலில் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று கவுண்டரில் இருந்து அப்டேட் படிவத்தை வாங்கி அதை நிரப்ப வேண்டும். அதில், உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் நீங்கள் திருத்தம் செய்ய விரும்பும் தகவல்களைக் கொடுக்க வேண்டும். ஆதார் சேவை மையத்தில் இருக்கும் அதிகாரி உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை எடுத்து சரிபார்ப்பார். அதில் உங்கள் கைரேகை முதல் கருவிழி ஸ்கேன் வரை அனைத்தும் சரிபார்க்கப்படும். அதற்குப் பிறகு, உங்கள் படிவம் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும்.
நீங்கள் வழங்கிய ஆவணங்கள் சரியாக இருந்தால் உங்கள் பிறந்த தேதி புதுப்பிக்கப்படும். அதற்கு நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் ஆதார் கார்டில் புதிய அப்டேட் வரும். ஆதார் மையத்தில் உங்களுக்கு யுஆர்என் சீட்டு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.
.png)