மக்கள் செல்வனுக்கு பிடித்த சிக்கன் 56 செய்வது எப்படி?
நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் 56 எப்படி செய்வது என உங்களுக்கு நாங்கள் கூறுகிறோம். இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி சிக்கன் செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - ½ கிலோ.
- புதினா - 1 கப்.
- கொத்தமல்லி இலை - 1 கப்.
- பச்சை மிளகாய் - 3.
- சீரகம் - 1 ஸ்பூன்.
- இஞ்சி - 1 துண்டு.
- பூண்டு - 4 பல்.
- மல்லித்தூள் - ⅓ ஸ்பூன்.
- கரம் மசாலா - ⅓ ஸ்பூன்.
- தயிர் - 3 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - ⅓ ஸ்பூன்.
- மிளகு தூள் - ½ ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- அரிசி மாவு - 2 ஸ்பூன்.
- எலுமிச்சை ஜூஸ் - 2 ஸ்பூன்.
- கறிவேப்பிலை - 1 கொத்து.
- எண்ணெய் - தேவையான அளவு.
- சிக்கன் 65 செய்ய முதலில் எடுத்து வைத்துள்ள சிக்கனை உப்பு மாற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
- இப்போது ஒரு மிக்சி ஜாரில், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து மை போல நன்கு அரைக்கவும்.
- இதையடுத்து, அரைத்த மசாலாவை சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் சேர்க்கவும். மேலும் அதில் மல்லித்தூள், கரம் மசாலா, தயிர், மஞ்சள் தூள், மிளகு தூள், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- கடைசியாக அதில் எலும்பிச்சை சாறு சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
- எண்ணெய் சூடானதும் ஊறவைத்த சிக்கனை கறிவேப்பிலை சேர்த்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்க விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் சிக்கன் 65 தயார். இந்த வாரம் இப்படி சிக்கன் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.