DigiLocker வழியாக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

பொதுத்தேர்வு முடிவுகள் (TN 12th Result 2025) வரும் 09.05.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இணையதளம் மட்டுமில்லாமல், DigiLocker வழியாகவும் அறிந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் 09.05.2025 அன்று காலை 9.30 மணி அளவில் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வ காட்டும் நிலையில், முடிவுகளுக்கான இணையதளங்கள் அதிக பயனர்கள் காரணத்தினால் முடங்கலாம். அதனைத் தவிர்த்து, வேகமாக முடிவுகளை DigiLocker மூலமும் அறிந்துகொள்ளலாம்.
படி 1 : https://results.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : தேர்வு முடிவுகள் வெளியானதும், Tamil Nadu State Board 12th Result 2025 என இடம்பெற்று இருக்கும்.
படி 3 : அதனைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து, மாணவர்களின் ரோல் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியானதும், DigiLocker மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதற்கு அதில் மொபைல் எண் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
படி 1 : உங்கள் மொபைலில் DigiLocker App பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
படி 2 : அதில் Get Started என இருப்பதை கிளிக் செய்து புதிய கணக்கை (Create Account) தொடங்க வேண்டும்.
படி 3: மொபைல் எண்/ இமெயில் முகவரி கொண்டு ஒடிபி எண் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
படி 5 : ஆதார் எண் கொண்டு கணக்கை தொடங்கலாம்.
படி 6 : அதில் Tamil Nadu Marks Sheet என தேடி, பதிவு எண், தேர்வு மாதம், தேர்வு ஆண்டு ஆகிய விவரங்கள் உள்ளிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.