ஆன்லைன் மூலம் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்திய மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் பல நேரங்களில் ஆதார் அட்டையை கையோடு எடுத்து செல்ல மக்கள் மறந்துவிடுகின்றனர். அந்த நேரத்தில் ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். UIDAI ஆதாரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய பல வழிகளை அறிமுகம் செய்துள்ளது.
அதில் எளிமையான வழி இதோ. முதலில் ஆதார் அதிகாரபூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்பதற்கு செல்ல வேண்டும். அதில் ஆதார் எண் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். அதன் பின் send OTP ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களுடைய மொபைலுக்கு வரும் OTPயை உள்ளிட வேண்டும். பின் சரிபார்க்க அல்லது பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்டதும் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட ஆதார் அட்டை PDF வரும். அதில் உங்களுடைய ஆதார் அட்டையை பார்க்க, உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களுடன் உங்கள் பிறந்த ஆண்டை YYYY வடிவத்தில் உள்ளிட வேண்டும்.