குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி ? VJமணிமேகலையின் சேட்டைக்கு குவியும் லைக்ஸ்..!
குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி ? VJமணிமேகலையின் சேட்டைக்கு குவியும் லைக்ஸ்..!

சன் மியூசிக் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் மணிமேகலை. இவரது நகைச்சுவையான பேச்சுக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இவரது பேச்சு, வெகுளித்தனம் ரசிகர்களை கட்டி இழுத்து. இதன் நடுவே, இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் செய்த சேட்டைகள் அளவில்லாதது.
இவருக்கு சமைக்க தெரியாது, இருப்பினும், தனது மற்றும் தனது கணவர் பெயர் வைத்து யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் இவர் சமைப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது, மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.
தனது கணவருடன் குக்கரில் சமைக்கும் போது, பாதுகாப்புக்காக ஹெல்மெட் போட்டு கொண்டு சமைக்கும் படியான புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இத்துடன், ”குக்கர் வெடிக்காமல் சமைப்பது எப்படி.?” என்று பதிவிட்டுள்ளார் இவர். இதுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
newstm.in