1. Home
  2. தமிழ்நாடு

பெண்களுக்கு 1 லட்சம் தரும் "பிங்க் ஆட்டோ" திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்...?

1

250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு மானியம் வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி செலவில் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் செயல்பட உள்ளது. இதனால் பெண்களின் வாழ்வாராதம் உயரும் என அரசு கூறுகிறது. இது ஒரு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டோக்கள் பெண்களால் மட்டுமே இயக்கப்படும் என்பதால் பெண் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி, பெண்களுக்கான உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.

இந்த நிலையில் பிங்க் ஆட்டோவுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசத்தை அரசு நீட்டித்து உள்ளது. இதுதொடர்பான சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் அறிவிப்பின்படி, சென்னையில் பிங்க் ஆட்டோக்களை மானிய விலையில் பெறுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

i. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
iii. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
iv. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
v. சென்னையில் குடியிருக்க வேண்டும்

இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.

Trending News

Latest News

You May Like