1. Home
  2. தமிழ்நாடு

பான் 2.0 கார்டை ஆன்லைனிலே சுலபமாக விண்ணப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா ?

1

ஆன்லைனில் பான் 2.0 கார்டை பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது முழுமையாக பார்க்கலாம்.

இந்தியாவில் அனைத்து டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருவதால் மக்களால் எந்தவொரு திட்டத்தையும் எளிதில் அணுக முடியும் என கூறப்படுகிறது. இதனால் அரசு அனைத்து துறைகள் பெரும்பாலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது பான் கார்டையும் முழுக்க முழுக்க டிஜிட்டல் ஆக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..

இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பான் கார்டு 2.0 திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு இலவச இ-பான் அட்டைகள் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக இலவசமாக பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் இலவசமாக புதுப்பிக்கலாம். இதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. அதே நேரம் பான் 2.0 கார்டின் நகலை பெறுவதற்கு ஆர்டர் செய்ய விரும்பினால், அதற்காக ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

1. முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அங்கு கேட்கப்படும் பான், ஆதார் அட்டை மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.

3. இதனையடுத்து OTP பெறுவதற்கான வழியை தேர்ந்தெடுத்து, அதனை 10 நிமிடங்களுக்குள் உள்ளிட வேண்டும்.

4. இந்த சேவை பான் வழங்கிய 30 நாட்களுக்குள் மூன்று கோரிக்கைகள் வரை இலவசம். ஜிஎஸ்டி உட்பட, அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கு ரூ.8.26 சேவைக்கட்டணமாக பெறப்படும்.

5. பணம் செலுத்திய பிறகு விண்ணப்பத்தாரர் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு 30 நிமிடங்களுக்குள் e-PAN அனுப்பப்படும்.

Trending News

Latest News

You May Like