1. Home
  2. தமிழ்நாடு

எப்படி நீமட்டும் இறந்துபடுவாய் அண்ணா? பேரறிஞர் பிறந்தநாளில் கவிதை எழுதிய வைரமுத்து!

Q

பேரறிஞர் பிறந்தநாளில் கவிதை எழுதிய வைரமுத்து!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்றழைக்கப்படும் அண்ணா, அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னும், இன்றைய அரசியலின் பேச்சாகவும் மூச்சாகவும் இருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 

இருமொழிக்கொள்கை

இறந்துபடவில்லை

மாநில சுயாட்சிக்கான

காரணங்கள் இன்னும்

காலமாகிவிடவில்லை

பகுத்தறிவின் வேர்கள்

பட்டுவிடவில்லை

இனமானக் கோட்டை

இற்றுவிடவில்லை

சமூக நீதிக்கொள்கை

அற்றுவிடவில்லை

மதவாத எதிர்ப்பு

மாண்டுவிடவில்லை

எப்படி நீமட்டும்

இறந்துபடுவாய் அண்ணா?

நிழல் விழுந்தால்

பொருள் இருக்கிறது

என்று பொருள்

லட்சியம் வாழ்ந்தால்

அந்த மனிதன் வாழ்கிறான்

என்று பொருள்

இன்னும் நீ இருக்கிறாய்

அண்ணா!

எங்கள் கொள்கை வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like