சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 64,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 40,111 பேர் குணமடைந்துள்ளனர். 996 பேர் உயிரிழந்துள்ளனர். 23,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை கடந்த ஜூன் 29-ம் தேதி வரை வெளியிட்டு வந்த சென்னை மாநகராட்சி ஜூன் 30-ம் தேதி முதல் விவரம் வெளியிடுவதில் மாற்றம் செய்துள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#chennaicorporation pic.twitter.com/nstB525nda
— Greater Chennai Corporation (@chennaicorp) July 4, 2020