1. Home
  2. தமிழ்நாடு

உங்களுடைய சேமிப்புக் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் போடலாம்? எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு!

1

சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அதிகபட்ச வரம்பு என்ன என்று நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அதுபற்றிய விதிகள் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

பொதுவாக, ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ஒருவர் சேமிப்புக் கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அது வரி வரம்பிற்குள் வரும். அதற்கு வரி கட்ட வேண்டும். ஒருவர் 10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அந்த வங்கி வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது வருமான வரித் துறை பணத்தின் ஆதாரத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம். அவரை வரி செலுத்துமாறும் கேட்கலாம்.

சேமிப்புக் கணக்கில் ஒரு நாளில் ரூ. 50,000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

அந்த ரூ. 50,000 செலுத்தினாலும் பான் கார்டு வழங்குவது கட்டாயம் ஆகும்.
 

உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் நீங்கள் படிவம் 60/61 ஐ நிரப்ப வேண்டும்.

சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டி ஒரு வருடத்தில் ரூ. 10,000க்கு மேல் இருந்தால், அந்தப் பணத்திற்கு நிலையான ஸ்லாப் அடிப்படையில் வரி விதிக்கப்படும். மூத்த குடிமக்கள் மட்டுமே ரூ.50,000 வரை வட்டிக்கு வரிவிலக்கு பெற முடியும்.

வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால், அதற்கு தேவையான ஆதாரங்களை முதலில் அளிக்க வேண்டும். வங்கி அறிக்கைகள், முதலீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவது கட்டாயமாகும். இதைப் பற்றி வரி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவின் கீழ், ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது.

Trending News

Latest News

You May Like