1. Home
  2. தமிழ்நாடு

துறை வாரியாக எவ்வளவு கோடி ஒதுக்கீடு.. இதோ முழு விவரம்..!

Q

2,676 பள்ளிகளில் வகுப்பறைகள் ரூ.65 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

* மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கு அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும்.

* முதல்வரின் காலை உணவு திட்டம், நகரப்பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ரூ.600 கோடி ஒதுக்கீடு

* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்.

* அரசு பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை மாற்றப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு

* ட்ரோன் தொடர்பாக புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

* தமிழகத்தில் அனைத்து வகை அரசு கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு

* 8 மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* 2025-26ம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும்.

* காஞ்சிபுரம் புற்றுநோய் மையத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

துறை வாரியாக விபரம் பின்வருமாறு

* உயர் கல்வித்துறைக்கு 8,494 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு.
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்:
* புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும்.
* வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநானக் கல்லூரி வரை ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்
* 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதி அமைக்கப்படும்.
* 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

Trending News

Latest News

You May Like