இத்தனை பேருக்கு வேலை போச்சா? பணிநீக்க நடவடிக்கைகளில் இறங்கிய LinkedIn..!
லிங்க்டு இன் (LinkedIn) நிறுவனம் இப்போது மெகா ஆட்குறைப்பு செய்துள்ளது. சமூக வலைதள தொழில்நுட்ப நிறுவனமான லின்க்டு இன் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 1 சதவீதமாகும்.
லிங்க்டு இன் நிறுவனத்துக்கு இந்த ஆண்டு முழுவதும் மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. போதிய அளவில் வருவாய் கிடைக்கவில்லை. கடந்த எட்டு காலாண்டுகளாகவே நிறுவனத்தின் லாபம் மந்தமாகவே இருந்துள்ளது. இதன் விளைவாகவே, செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளும் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்பத் துறையில் பணி நீக்கங்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. அமேசான், மெட்டா, கூகுள் உள்ளிட்ட பெரிய பெரிய நிறுவனங்கள் கூட தங்களது ஊழியர்களை பெரிய அளவில் பணி நீக்கம் செய்துள்ளன. புதிய வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன.