தமிழகத்தில் 12 நாட்களில் இத்தனை பேர் உயிரிழப்பா!? அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து மார்ச் 30ஆம் தேதி வரை ஒருவர் மட்டுமே உயிரிழந்திருந்தார். அவர் மதுரையை சேர்ந்தவர். அதுதான் தமிழகத்தின் முதல் கொரோனா உயிரிழப்பு. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை 26 பேர் வைரஸ் தொற்று பலியானார்கள். மே மாதம் முழுவதும் 133 பேர் கொரோனா காரணமாக மரணித்தார்கள். இது ஏப்ரல் மாதத்தை விட 5 மடங்கு அதிகம். இந்நிலையில் ஜூன் மாதத்தில் 12 நாட்களில் மட்டும் 207 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in