விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது.. இரவில் சுதீஷ் அளித்த பேட்டியால் பரபரப்பு !!

விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது.. இரவில் சுதீஷ் அளித்த பேட்டியால் பரபரப்பு !!

விஜயகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது.. இரவில் சுதீஷ் அளித்த பேட்டியால் பரபரப்பு !!
X

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்க்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே மருத்துவமனையில் விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த சூழலில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் எல்.கே.சுதீஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் என்று தெரிவித்தார்.

இதனால் தேமுதிக தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர். எனினும் அவர் உறுதியாக இன்றுமாலை வீடு திரும்புவாரா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

newstm.in

Next Story
Share it